பகீர்... பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்க சிறப்பு பூஜை- சுயேச்சை வேட்பாளரின் 'மயான பூஜை'!

 
பூஜை காளி பூஜை காளி

தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக, மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி கோவிலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'சாபமிட்டு' சிறப்பு பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டியன், டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். ஒரு சமூக ஆர்வலரான இவர், தற்போது நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

பணம் ரொக்கம் போனஸ் ஊக்கத்தொகை உதவித்தொகை

பெரிய அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டுகளைக் கவருவதாகக் குற்றம் சாட்டிய சங்கரபாண்டியன், தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த தத்தனேரி மயானத்தில் உள்ள காளி கோவிலைத் தேர்ந்தெடுத்தார். அங்கு அவர் நடத்திய பூஜையில், "வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் தேர்தலில் தோல்வியடைய வேண்டும்; அவர்கள் ரத்த வாந்தி எடுக்க வேண்டும்" என வேண்டி பூஜைகள் செய்தார்.

"பணம் கொடுப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேர்மையாகப் போட்டியிடும் என்னைப் போன்றவர்களுக்கு இதனால் தோல்வியே மிஞ்சுகிறது. அதனால்தான் கடவுளிடம் முறையிட வந்துவிட்டேன்" என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

பணம் ரொக்கம் சோதனை பறிமுதல்

மதுரையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர் ஒருவரே சுடுகாட்டிற்குச் சென்று எதிர்மறைப் பூஜை நடத்தியது அப்பகுதி மக்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. பண பலத்திற்கு எதிராக ஒரு சாமானிய மனிதன் தனது இயலாமையை வெளிப்படுத்திய முறையாக இது பார்க்கப்பட்டாலும், இந்த வினோத நடவடிக்கை தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.