கடல் கன்னி சாகச நிகழ்ச்சியில் கண்ணாடித் தொட்டி உடைந்து 15 பேர் காயம்... அதிர்ச்சி வீடியோ!

 
கண்ணாடி

 

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழாவில், கடல் கன்னி சாகச நிகழ்ச்சியின்போது கண்ணாடித் தொட்டி திடீரென உடைந்ததில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

பஹ்ரைச் மாவட்டம் கலேபூர் கிராமத்தில் நடைபெற்று வரும் தாதா மியான் உர்ஸ் திருவிழாவையொட்டி, 'ஜல்பரி' எனப்படும் கடல் கன்னி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பெண் ஒருவர் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடித் தொட்டிக்குள் சாகசம் செய்து கொண்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், தொட்டியில் ஏற்பட்ட அதிகப்படியான நீர் அழுத்தம் காரணமாக கண்ணாடி திடீரென உடைந்து சிதறியது.

இதில் தொட்டியிலிருந்து வெளியேறிய தண்ணீருடன் கண்ணாடித் துண்டுகளும் பார்வையாளர்கள் மீது பாய்ந்தன. காயமடைந்த 15 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெறாமலும், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.