நாதக கார்த்திகா உட்பட 12 பேரின் ஜாமின் மனுக்கள் ஏற்பு - நாளை விசாரணை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது காவல்துறையினரை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கார்த்திகா உள்பட 12 பேர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களைத் தாராபுரம் நீதிமன்றம் விசாரணைக்காக ஏற்றுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது, முதலமைச்சர் விஜய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை கார்த்திகா உள்ளிட்ட கட்சியினர் மிரட்டியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தரப்புக்கு ஜாமின் கோரி தாராபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிமன்றம் ஏற்றுள்ள நிலையில், இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
