பழனி கோயில் நில மோசடி வழக்கு - 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

 
பழனி  பரந்தாமன் ரமேஷ்

பழனி கோயில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலியாகப் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பழனி ஜஸ்டின் மணிகண்டன்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான மடத்தின் நிலத்தைப் போலியான ஆவணங்களைத் தயாரித்துப் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய முருகதாஸ், அன்வர்தீன் மற்றும் சேதுபதி ஆகிய 3 பேரைச் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

பழனி கோயில் நில மோசடி

கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜாமீன் கோரி திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னதாக, இந்த பிரம்மாண்ட நில மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக, குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கச் சிபிசிஐடி போலீசாருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.