பஜ்ஜி சாப்பிட்ட பள்ளி மாணவி பலி... கதறித் துடித்த பெற்றோர் !

 
பஜ்ஜி

 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீத்திகா அங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

ஆம்புலன்ஸ்

கடந்த 3ஆம் தேதி செந்தில்குமார் தனது மகள் ஸ்ரீத்திகாவுடன் பெரியபாளையம் அடுத்த தண்டலம் பஜார் வீதிக்கு சென்றார். அங்குள்ள கடையில் வாங்கிய பஜ்ஜியைச் சாப்பிட்ட ஸ்ரீத்திகா திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

உடனே திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.