பகீர்... வீட்டு வேலைக்கு வந்த 16 வயது சிறுமிக்கு ஒரு வருடமாக சூடு வைத்துச் சித்ரவதை; 45 வயது பெண் செய்து வந்த கொடூரம்!

 
சிறுமி சித்ரவதை வீட்டுவேலை டெல்லி

டெல்லியில் 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, ஓராண்டாகத் தொடர்ச்சியாகக் கொடூரச் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கிய 45 வயதுப் பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், தனது வீட்டின் அன்றாட வேலைகளைச் செய்வதற்காக 16 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தியுள்ளார். சிறுமி தினமும் காலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இடைவிடாமல் கடுமையான வீட்டு வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி வேலையைச் சரியாகச் செய்யவில்லை எனக் கூறி, சூடான இரும்பு கரண்டி மற்றும் கத்தியால் அவரது உடலின் பல்வேறு இடங்களில் சூடு வைத்துப் கொடூரமான காயங்களை ஏற்படுத்தியுள்ளார் அந்தப் பெண். மேலும், சிறுமிக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்காமல் ஒருமுறை தொடர்ச்சியாக 3 நாட்கள் அடைத்து வைத்துப் பட்டினி போட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

சிறுமியின் தொடர்ச்சியான அலறல் சத்தத்தையும், பரிதாப நிலையையும் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் தகவல் வெளியாகி, காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அச்சிறுமியை மீட்டனர்.

மீட்கப்பட்ட 16 வயது சிறுமி ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறையினர், சிறுமியைச் சித்ரவதை செய்த 45 வயதுப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டங்களின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.