பகீர்... 17,000 அடி உயரத்தில் விமானத்தை தாக்கிய மின்னல் - அதிர்ஷ்டவசமாக 110 பயணிகளுடன் தப்பித்த இண்டிகோ விமானம்!

 
மின்னல் விமானம்

பாட்னாவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் 17,000 அடி உயரத்தில் பறந்தபோது மின்னல் தாக்கியதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. எனினும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதுடன் அதில் பயணம் செய்த 110 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

பாட்னாவிலிருந்து லக்னோவை நோக்கி இண்டிகோ விமானம் வழக்கமான வழித்தளத்தில் இயக்கப்பட்டது. விமானம் வான்வெளியில் 17,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்தது.

மின்னல் விமானம்

விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 110 பேர் இருந்தனர். அனைவரும் எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாக இருந்தனர். மோசமான வானிலைச் சூழலை எதிர்கொண்ட போதிலும், லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிட்ட நேரத்திற்கு 8 நிமிடங்கள் முன்னதாகவே விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பின்னரே அதன் முன்பகுதியில் ஏற்பட்ட சேதம் தெரியவந்தது.