பகீர் வாக்குமூலம்... சடலத்துடன் உடலுறவு.. உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரன்!
சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில், 50 வயதுடைய பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது சடலத்துடன் உடலுறவு கொண்ட பின்னர்ப் பிணத்தைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய 42 வயது நபரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் சந்தேக நபரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் செய்த அருவருக்கத்தக்கச் செயல்களை எந்தவித கூச்சமுமின்றி வாக்குமூலமாக அளித்ததைக் கேட்டு விசாரணை அதிகாரிகளே உறைந்துபோயினர்.

காவல்துறையினரின் ஆழமான விசாரணையில், இவர் ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டும் இதே போன்றதொரு கொடூரக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகும், தனது மனநோயாளித் தனமான கொடூரப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் மீண்டும் அதே பாணியில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஒருமுறை தண்டனை அனுபவித்தும் மீண்டும் அதே போன்ற கொடூரக் குற்றத்தைச் செய்திருப்பது, அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் சட்டம் ஒழுங்கு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
