மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

 
மணிமுத்தாறு அருவி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மணிமுத்தாறு

அருவியைப் பார்வையிட மட்டும் அனுமதி

மணிமுத்தாறு அருவி, நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். ஆனால், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மணிமுத்தாறு அருவி

அதே நேரத்தில், அருவியின் இயற்கை அழகைப் பார்வையிட மட்டும் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். எனவே, அருவிக்குச் செல்லத் திட்டமிடுவோர் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.