டிசம்பர் 1 முதல் கட்டுமானப் பணிகளுக்கு முழுத் தடை... தலைநகரில் தீவிர கட்டுப்பாடுகள்!

 
டெல்லி

 

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வரும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 20 வரை உள்ள 42 நாட்களுக்கு அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலக் காற்று மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 500 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பெரிய கட்டுமானத் தளங்கள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும் விதிமீறல்களைத் தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் (AI கேமராக்கள்) மற்றும் டஸ்ட் போர்ட்டல் (Dust Portal) பயன்படுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.