செம... ஒரு நாள், டெஸ்ட், டி20.... 3 போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்கள் ... வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிரடி !

 
பங்களாதேஷ்

வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) தனது தேசிய கிரிக்கெட் அணியின் தலைமையில்  திடீர் மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான சர்வதேச போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அணியின் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், திறம்பட வழிநடத்தவும் இந்த முக்கிய முடிவை எடுக்க வாரியம் திட்டமிட்டு வருகிறது. இந்த அதிரடித் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

புதிய திட்டத்தின்படி, டி20 அணியின் கேப்டனாக இருக்கும் லிட்டன் தாஸ் ஒரு நாள் போட்டி அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், நஜ்முல் ஹொசைன் சாண்டோ டெஸ்ட் அணியின் கேப்டனாகத் தொடர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வடிவங்களுக்கும் தனித்தனி தலைவர்களை நியமிப்பதன் மூலம் வீரர்களின் மீதான மன அழுத்தம் குறையும் எனக் கருதப்படுகிறது. ஒவ்வொரு போட்டி வடிவத்திற்கும் தனித்துவமான உத்திகளை வகுத்துச் செயல்பட இந்த முடிவு பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.

Welcome to the era of '3 formats, 3 captains', Bangladesh! 🇧🇩 #BangladeshCricket

இது தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் நடைபெறவுள்ள பி.சி.பி இயக்குநர்கள் கூட்டத்தின் விரிவான ஆலோசனைக்குப் பிறகே முடிவாகும். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வாரியத்தின் சார்பில் முறைப்படி வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் வாரியம் எடுக்கவுள்ள இந்த முக்கிய மாற்றம் அணியின் எதிர்கால வளர்ச்சிக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும்.