பாங்காக்கை மூழ்கடித்த கனமழை! 😱 50 மாவட்டங்களும் பேரிடர் மண்டலம்.. 84,000 பேர் பாதிப்பு

 
பாங்காக்

 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதையடுத்து பாங்காக்கின் 50 மாவட்டங்களும் வெள்ளப் பேரிடர் மண்டலங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24-ந்தேதி முதல் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகளில் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால் வடிகால் அமைப்புகள் மற்றும் கால்வாய்கள் நிரம்பி, சாலைகளில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. 13-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் வெள்ளநீரில் சிக்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Bangkok Declares All 50 Districts Flood Disaster Zones | Nexuswild

இந்த வெள்ளப்பெருக்கால் தாய்லாந்து முழுவதும் 84,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாங்காக்கில் மட்டும் சுமார் 52,000 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 4,900-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பை சமாளிக்க பாங்காக் நிர்வாகம் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். முக்கிய கால்வாய்களில் இருந்து வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Bangkok declares disaster after homes flooded, roads submerged by heavy rain

வெள்ள பாதிப்பு காரணமாக பாங்காக்கில் பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக சுவர்ணபூமி மற்றும் டான் முயோங் சர்வதேச விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் முன்னதாகவே புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்தாலும், கால்வாய்களில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் வெள்ளநீர் முழுமையாக வடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.