21 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் பிச்சைக்காரர்...தினமும் ஒரு மனைவியுடன் பிச்சை... வைரல் வீடியோ!

 
பிச்சைக்காரர்

 

வங்கதேசத்தைச் சேர்ந்த 35 வயது பிச்சைக்காரர் ஒருவர் தனக்கு 21 மனைவிகள் இருப்பதாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வசித்து வரும் அவர், தனது மனைவிகளுடன் சேர்ந்து பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

மொரு மியா என்ற அந்த நபர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தான் எந்த பெண்ணையும் வற்புறுத்தவில்லை என்றும், பெண்களே தங்களை திருமணம் செய்து கொள்ள முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் என்னிடம் எதைப் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களிடம்தான் அதற்கான பதில் இருக்கிறது. பெண்களே என்னிடம் வந்து திருமணம் செய்து கொள்வோமா என்று கேட்பார்கள்” என மொரு மியா கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தன்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்த பெண்களில் பலர் தன்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றும், அவர்களின் திருமண விருப்பத்தை நிராகரிப்பது அவர்களை அவமதிப்பதாக இருக்கும் என நினைத்து ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

21 மனைவிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், மொரு மியாவின் வாழ்க்கை மிகவும் எளிமையானதாகவே உள்ளது. ஒரே அறை கொண்ட சிறிய வீட்டில் வசிப்பதாகவும், பிச்சை எடுப்பதே தனது முக்கிய வருமானம் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், தினமும் ஒரு மனைவி தன்னுடன் பிச்சை எடுக்க வருவதாகவும், அடுத்தடுத்த நாட்களில் மற்ற மனைவிகள் மாறி மாறி தன்னுடன் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Bangladeshi beggar has 21 wives, admits he struggles to remember their names: 'Couldn't say no'

இந்த நிலையில், செய்தியாளர்கள் அவரது 21 மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது, அவரால் அனைவரது பெயர்களையும் நினைவுகூர முடியவில்லை என கூறப்படுகிறது. ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா, பருல் உள்ளிட்ட சில பெயர்களை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொரு மியாவின் பேட்டி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவரது வித்தியாசமான வாழ்க்கை குறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.ஒரே அறை கொண்ட வீடு, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துவது, 21 மனைவிகள் இருப்பதாக கூறப்படுவது, அவர்களின் பெயர்களில் சிலவற்றையே நினைவில் வைத்திருப்பது என மொரு மியாவின் வாழ்க்கை தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.