நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. 4 நாட்களுக்கு சேவைகள் முடங்கும் அபாயம்!
மாதத்தின் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ப உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான 'யுஎ்பிியு' சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வியாழக்கிழமை நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 12 (வெள்ளி) வேலை நாளாக இருப்பினும், மாதத்தின் இரண்டாவது சனி (செப். 13) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) வார இறுதி விடுமுறை நாட்கள் வருகின்றன. மேலும் செப்டம்பர் 14 அன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் சேர்ந்து வருவதால், தொடர்ச்சியாக வங்கிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

அனைத்துச் சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதும், மாற்றியமைக்கப்பட்ட செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதும் வங்கி ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
தொடர் விடுமுறை மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளின் பணப் பரிவர்த்தனைகள், காசோலை கிளியரன்ஸ் உள்ளிட்ட வர்த்தகப் பணிகள் பாதிக்கப்படலாம். மேலும், ஏடிஎம் மையங்களில் உரிய நேரத்தில் பணம் நிரப்பப்படுவதில் தடங்கல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடும் சிரமத்தைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
