அக்டோபர் மாசத்தில 15 நாட்கள் விடுமுறை ... வங்கிப் பணிகள திட்டமிட்டுக்கோங்க!
இந்தியா முழுவதும் பொது மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் செயல்படும் நாட்கள், விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முந்தைய மாதத்தில் அறிவித்து வருகின்றன. இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளை திட்டமிட்டு கொள்ளலாம். நவராத்திரி விடுமுறை பண்டிகை காலமாக இருப்பதால் சப்தமி, அஷ்டமி மற்றும் தசரா என நாட்டின் பல பகுதிகளில் குறைந்தது 3 முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே, எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க தனிநபர்கள் இந்த விடுமுறை நாட்களில் தங்கள் நிதிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் , 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகள் என வார இறுதி நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் இந்த பட்டியலில் திருவிழாக்கள், தேசிய விடுமுறைகளும் இடம்பெற்றுள்ளது.
அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்
அக்டோபர் 1, 2024 : செவ்வாய் : மாநில சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் ( ஜம்மு)
அக்டோபர் 2 , 2024 : புதன் கிழமை : காந்தி ஜெயந்தி/மஹாலய அமாவாசை
அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத் - ஆந்திரா மற்றும் தெலுங்கானா, இம்பால், இட்டாநகர், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, கோஹிமா, லக்னோ, மும்பை , நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்
அக்டோபர் 3 , 2024 : வியாழக்கிழமை : நவராத்ர ஸ்தாப்னா ஜெய்ப்பூர்
அக்டோபர் 6 , 2024 : ஞாயிற்றுக்கிழமை : வார விடுமுறை
அக்டோபர் 10, 2024 : வியாழக்கிழமை : துர்கா பூஜை/தசரா (மகா சப்தமி)
அகர்தலா, குவஹாத்தி, கோஹிமா மற்றும் கொல்கத்தா
அக்டோபர் 11, 2024 : வெள்ளிக்கிழமை : தசரா (மகாஷ்டமி/மகாநவமி)/ஆயுத பூஜை/துர்கா பூஜை (தசைன்)/துர்கா அஷ்டமி அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், குவஹாத்தி, இம்பால், இட்டாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங்
அக்டோபர் 12, 2024 : 2வது சனிக்கிழமை : தசரா/தசரா
அகர்தலா, பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத் - ஆந்திரா மற்றும் தெலுங்கானா, இட்டாநகர், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்
அக்டோபர் 13, 2024 : ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 14, 2024 : திங்கட்கிழமை துர்கா பூஜை (தாசைன்)
காங்டாக்
அக்டோபர் 16, 2024 : புதன் கிழமை : லட்சுமி பூஜை
அகர்தலா மற்றும் கொல்கத்தா
அக்டோபர் 17, 2024 : வியாழக்கிழமை மகரிஷி வால்மீகி ஜெயந்தி/கடி பிஹு ( பெங்களூரு, கவுகாத்தி மற்றும் சிம்லா)
அக்டோபர் 20, 2024 : ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 26, 2024 : 4 வது சனிக்கிழமை
அக்டோபர் 27, 2024 : ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 31, 2024 : வியாழக்கிழமை
தீபாவளி (தீபாவளி)/காளி பூஜை/சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்/நரக சதுர்தசி அகமதாபாத், ஐஸ்வால், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத் - ஆந்திரா மற்றும் தெலுங்கானா, இட்டாநகர், ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் திருவனந்தபுரம்
இந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் அதே நேரத்தில் இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் UPI, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். இந்தச் சேவைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது இடையூறு ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!