ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு... முன்கூட்டியே திட்டமிடுங்க!

 
எஸ்பிஐ வங்கி விடுமுறை எஸ்பிஐ வங்கி விடுமுறை

நடப்பு மே மாதம் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அடுத்த மாதத்திற்கானவங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி முறைப்படி வெளியிட்டுள்ளது. வாராந்திர விடுமுறைகள், தேசியப் பண்டிகைகள் மற்றும் மாநில வாரியான பிராந்திய விழாக்கள் உட்பட ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களது காசோலை பரிவர்த்தனை மற்றும் வரைவோலை போன்ற முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும்.

ஸ்டேட் பாங்க் எஸ்.பி.ஐ. வங்கி

ஜூன் 2026: நாடு தழுவிய பொதுவான வங்கி விடுமுறைப் பட்டியல்:

ஜூன் 7 – ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)

ஜூன் 13 – இரண்டாவது சனிக்கிழமை (மண்டல விடுமுறை)

ஜூன் 14 – ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)

ஜூன் 21 – ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)

ஜூன் 26 – மொஹரம் பண்டிகை (தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

ஜூன் 27 – நான்காவது சனிக்கிழமை (மண்டல விடுமுறை)

ஜூன் 28 – ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)

மாநில வாரியான பிராந்திய மற்றும் கூடுதல் விடுமுறை விவரங்கள்:

தேசிய விடுமுறைகள் தவிர, அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் கலாச்சாரப் பண்டிகைகள் மற்றும் ஜெயந்திகளை முன்னிட்டு குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் கூடுதலாகப் பின்வரும் நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கி

ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் வரும் மாநில விடுமுறைகள்:

ஜூன் 15 (திங்கட்கிழமை): ராஜா சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஒடிசா (புவனேஸ்வர்) மாநிலத்தில் மட்டும் வங்கிகள் இயங்காது.

ஜூன் 17 (புதன்கிழமை): YMA தினத்தை முன்னிட்டு மிசோரம் (ஐஸ்வால்) மாநிலத்திலும், மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு ஹரியானா மாநிலத்திலும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஜூன் 18 (வியாழக்கிழமை): ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜி ஷாஹிதி தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஜூன் 29 (திங்கட்கிழமை): சந்த் குரு கபீர் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் (சிம்லா) ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கலாம்.

ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை): ரெம்னா நீ (Remna Ni) திருநாளை முன்னிட்டு மிசோரம் (ஐஸ்வால்) மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவைகள் தடையின்றிச் செயல்படும்:

வங்கி கிளைகளின் நேரடிச் செயல்பாடுகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்கான அனைத்து நவீன டிஜிட்டல் வங்கிச் சேவைகளும் வழக்கம் போல் 24 மணி நேரமும் தடையின்றிச் செயல்படும் என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

இதன்படி, ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தல் மற்றும் டெபாசிட் செய்தல், இணைய வங்கிச் சேவை , கைபேசி வங்கிச் சேவை ஆகியவை முழுமையாகச் செயல்படும். மேலும், யுபிஐ கட்டண முறைகளான கூகுள் பே, போன்பே , பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாகப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் கணக்கு இருப்புச் சரிபார்ப்புகளை வாடிக்கையாளர்கள் எவ்விதத் தொய்வுமின்றி எப்போது வேண்டுமானாலும் எளிதாக மேற்கொள்ளலாம்.