ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல்!! வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

 
bank holiday

ஜூலை மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. ஆன்லைன் பரிவர்த்தனை, கார்டு டிரான்ஸாக்சன் என அனைத்து பணபரிவர்த்தனைக்கும் வங்கியையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் அடுத்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.இந்தியாவின்  அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ரிசர்வ்  வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த விடுமுறை பட்டியல் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட பண்டிகை மற்றும் உள்ளூர் விடுமுறை தினங்களில் மட்டும் இவை மாறுதல் அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை
ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான வங்கி விடுமுறை தினங்களின் பட்டியல் 


 ஆகஸ்ட் 6: ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 8 செவ்வாய்கிழமை: காங்டாக் மண்டலத்தில் டெண்டாங் லோ ரம் ஃபாத் விழா  
ஆகஸ்ட் 12: 2 வது சனிக்கிழமை  
ஆகஸ்ட் 13: ஞாயிற்றுக்கிழமை  
ஆகஸ்ட் 15:  செவ்வாய்கிழமை : சுதந்திரதினம் 


ஆகஸ்ட் 16:  புதன்கிழமை : பார்சி புத்தாண்டு பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் மண்டலங்களில் உள்ள வங்கிகள் மட்டும் விடுமுறை  
ஆகஸ்ட் 18:  வெள்ளிக்கிழமை : ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி 
கௌகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை 
ஆகஸ்ட் 20:ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 26:4வது சனிக்கிழமை

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!
ஆகஸ்ட் 27:ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 28: திங்கட்கிழமை  ஓணம் பண்டிகை கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் இயங்காது.
ஆகஸ்ட் 29:  செவ்வாய்கிழமை திருவோணத்தையொட்டி, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை  
ஆகஸ்ட் 30: புதன்கிழமை ரக்‌ஷ பந்தன் பண்டிகையையொட்டி, ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா மண்டலங்கள் வங்கிகள்  விடுமுறை 
இந்த விடுமுறை தினங்களுக்கு ஏற்றபடி வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க. கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web