நாடு முழுவதும் நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் ஏடிஎம் கட்டணங்கள் ரத்து!

 
வங்கி ஏடிஎம்

பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன. அதன்படி, நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு எந்த வங்கியின் ஏடிஎம்களையும் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்த வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தினாலும் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் பிஎன்பி ஏடிஎம் மற்றும் சிஆர்எம் இயந்திரங்கள் முழுமையாகச் செயல்படும்.

ஏடிஎம்

பாங்க் ஆப் பரோடாவின் எந்த வங்கியின் ஏடிஎம் மூலமான பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இல்லை. ஏடிஎம் மற்றும் பணம் செலுத்தப் பயன்படும் சிஆர்எம் இயந்திரங்களும் தொடர்ந்து இயங்கும்.

அதே போன்று கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தாலும் அல்லது பிஎன்ஏ இயந்திரங்கள் மூலம் டெபாசிட் செய்தாலும் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்

வங்கி கிளைகளில் சேவைகள் பாதிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் தடையின்றிப் பரிவர்த்தனை செய்ய UPI, IMPS, RTGS, NEFT மற்றும் மொபைல், இன்டர்நெட், வாட்ஸ்அப் பேங்கிங் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.