மகாகவி பாரதியாரின் தங்கை மகன் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
கிருஷ்ணன்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாரணாசி வீட்டில் அவருடைய தங்கை லட்சுமி அம்மாள் வாழ்ந்து வந்தார். அவருடைய வீடு வாரணாசியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான அனுமர் படித்துறை  சிவமடம் எனும் பெயரில் அமைந்துள்ளது. பாரதியாரின் தங்கைக்கு ஒரு மகன். அவரது பெயர்  இருக்கிறார். அவருடைய பெயர் கே.வி. கிருஷ்ணன். இவரும் அதே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது 97 வயது காரணமாக   ஜூலை 15 ம் தேதி காலமானார். மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாளின் மகன் கிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருடைய  மறைவுக்கு பிரபலங்கள், தலைவர்கள் பலரும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாளின் மகன் கிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 


 

இது குறித்து   அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ” மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாளின்  மகன் திரு. கிருஷ்ணன்  காலமானார் என்ற செய்தியால்   வருத்தமடைந்தேன். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இசைத் துறைப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.  இவர் பன்முகத் திறமை பெற்றவர். பாரதியாரின் கவிதைகளை ஹிந்தியில்  மொழிபெயர்த்தது  பெரும்பாலோரிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  

இன்று பிறந்தநாள் காணும் பாரதியார் புகழை இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்!!

வாரணாசிக்கு சென்றிருந்த போது மகாகவியின் சகோதரியின் பேரனான திரு.ரவிக்குமார் அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து அவர்களுடன் உரையாடினேன்.  அந்நிகழ்வு  இன்றும் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கிறது. திரு. கிருஷ்ணன் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு,  தமிழக பிஜேபி சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!