முன்னாள் கூடைப்பந்து வீரர் மாரடைப்பால் காலமானார்!

 
john

 

தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கூடைப்பந்து வீரரும் மயக்க மருந்து நிபுணருமான மருத்துவர் ஜான் செல்வகுமார் பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 67 என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் திரும்பும்போது நாகப்பட்டினம் அருகே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது சகோதரர் ஜோதி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இவர் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பல்வேறு அணிகளுக்காகப் பலமுறை விளையாடிப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு இவர் இந்திய தேசிய அணியிலும் இடம்பெற்றுச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். விளையாட்டுத் துறையில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இவர் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

திருச்சி மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரது மறைவுச் செய்தி விளையாட்டு வீர்ர்கள் மற்றும் மருத்துவ வட்டாரத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த மருத்துவரின் உடலுக்குப் பலரும் நேரில் சென்று தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.