மாட்டு சிறுநீரில் குளித்து.. மாட்டு சாணத்தை ஃபேஸ் கிரீமாக பயன்படுத்தும் மக்கள்.. எங்கு தெரியுமா?

 
முண்டாரி

ஆப்பிரிக்க கண்டமான தெற்கு சூடானில், பழங்குடியின மக்கள் குளிப்பதற்கு மாட்டு மூத்திரம் பயன்படுத்துகிறார்கள். மேலும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க பசுவின் சாணத்தை சன்ஸ்கிரீனாக பயன்படுத்துகின்றனர். தெற்கு சூடானில் உள்ள Ankol Watsi இன மாடுகள் 8 அடி உயரம் வரை வளரும். இவை 500 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.41,000. முண்டாரி எனப்படும் பழங்குடியின மக்களிடையே இந்த வகை கால்நடைகள் பொதுவாக வளர்க்கின்றன.

அவர்கள் அதை தங்களின் மிகப் பெரிய சொத்தாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், மரியாதைக்குரிய சின்னமாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த பசுக்களை பாதுகாக்க பழங்குடியினர் ஆயுதங்களை வைத்துள்ளனர். குறிப்பாக பசுக்களைக் காக்க இயந்திர துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு மாட்டு மூத்திரம் குளிப்பதற்கு மட்டுமின்றி வீடுகளில் தெளிக்கவும், பல் துலக்கவும் பயன்படுகிறது.

பசுவின் சிறுநீரில் உள்ள அம்மோனியா பழங்குடியின மக்களின் தலைமுடியை ஆரஞ்சு நிறமாக மாற்றியுள்ளது. முண்டாரி பழங்குடியினர் பயன்படுத்தும் அங்கோல் வட்சி எனப்படும் இறைச்சிக்காக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பசுக்கள் கொல்லப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அதன் அதிக விலை. பழங்குடியின மக்களிடையே திருமணத்தின் போது வரதட்சணையாக இந்த அங்கோல் வட்சி மாடுகள் வழங்கப்படுகின்றன என்பது சுவாரஷ்யமான விஷயம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web