12 அணிகளாக மாறுகிறதா ஐபிஎல்? பிசிசிஐ செயலாளர் பளிச் விளக்கம்!

 
ஐபிஎல்

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணிகளின் எண்ணிக்கை 10-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுப்பு தெரிவித்துள்ளது.

BCCI Clears the Air on IPL Expansion Reports! 🏏 The Board of Control for Cricket in India (BCCI) has denied reports suggesting that the Indian Premier League (IPL) could expand from 10

2028ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படலாம் எனச் சமீபத்தில் தகவல்கள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, 2028ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை 12 அணிகளுடன் நடத்துவது குறித்து வாரியத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ, அதிகாரப்பூர்வமற்ற முறையிலோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பிசிசிஐயின் முழுக் கவனமும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் மீதே இருப்பதாக அவர் கூறியுள்ளார். 2027ஆம் ஆண்டு நடைபெறுவது ஐபிஎல் தொடரின் 20-வது பதிப்பாகும். இதனைச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில்தான் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

எனவே, 2028ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்படும் என்ற தகவல் வெறும் யூகத்தின் அடிப்படையிலானது என பிசிசிஐ தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.