கருப்பா இருக்க... இங்கிலீஷ் பேச தெரியல... மாமியார் டார்ச்சர் தாங்காமல் 19 வயது இளம்பெண் தற்கொலை!
கேரள மாநிலத்தில் தென்கோட்டி பகுதியில் வசித்து வருபவர் சஹானா மும்தாஜ் . 19வயதாகும் இவருக்கு மே மாதம் அப்துல் வஹீத்தும் திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களுக்கு திருமணம் முடிந்த 20 நாளில் அப்துல் துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு சஹானா தன்னுடைய கணவர் வீட்டில் மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார்.

இதில் சஹானாவை திருமணம் ஆன முதல் நாளிலிருந்து உடல் நிறத்தை காரணம் காட்டியும் ஆங்கிலம் பேச தெரியவில்லை என கூறியும் அவருடைய கணவரும் குடும்பத்தினரும் தொடர்ந்து டார்ச்சர் செய்து மனரீதியாக துன்புறுத்தினார்.
துபாயில் இருந்து கொண்டே சஹானாவை அவருடைய கணவர் whatsapp கால் மூலம் விவாகரத்து செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சஹானா மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். அவரால் படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் கல்லூரி பேராசிரியர்கள் அவரை நிலைமையை உணர்ந்து பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பெற்றோர் சகானாவை வீட்டிற்கு அழைத்து சென்று மனரீதியாக சிகிச்சை கொடுத்தனர். இதற்கு மாமியார் என் மகனுடன் 20 நாட்கள் மட்டும்தான் வாழ்ந்துள்ளாய்.

இனியும் இந்த உறவு நீடிக்க வேண்டுமா எனக் கூறி மாமியார் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் சகானா மன வேதனையில் தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது அறை நீண்ட நேரமாக திறக்காததால் பெற்றோர் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் சஹானாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
