உஷார்..! தினுசு தினுசா கிளம்புறாய்ங்க... 'வாடகை காதலன்' பெயரில் புதுவகை மோசடி.. புகார் எண் அறிவிப்பு - போலீசார் எச்சரிக்கை!

 
காதலன்

கவர்ச்சியான ஆண்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு 'வாடகை காதலன்' என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புதிய வகை மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மணி நேரம் காபி அருந்த ரூ.499, சினிமாவுக்கு செல்ல ரூ.1,249 என வெவ்வேறு சேவைகளுக்கு ஏற்பக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 1-ம் தேதியை முன்னிட்டு 50 சதவீத தள்ளுபடி விலையில் இந்தச் சலுகை வழங்கப்படுவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் டிரெண்டாக்கப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் உரையாடல்கள் மூலம் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண்களைத் தந்திரமாகப் பெற்று, பின்னர் அவற்றைப் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்க வாய்ப்புள்ளது என ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காதல் ஜோடி

முன்பின் தெரியாத நபர்களை நேரில் சந்திக்கச் செல்லும் போது பெரும் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதால் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் இதனை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் சமூக ஊடகங்களில் என்ன பார்க்கிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள் மற்றும் வெளியே செல்லும்போது யாரைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

காதல் காதலர்கள் பூங்கா கோவை கேக் மாஸ்டர்

இது போன்ற இணையவழி மோசடியில் சிக்கினாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான பதிவுகளைக் கண்டாலோ உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிலோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் அளிக்கலாம்.