ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருங்க... நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

 
ரஜினி

அனைவரும் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக இருக்க பொங்கல் வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை இன்று சென்னையில் தெரிவித்தார். இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

 

rajini

இந்நிலையில்  போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் மற்றும் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கும் என்றார். 

From around the web