சீக்கிரம் கதவை திற ... காருக்குள் சிக்கிய கரடி தொடர் ஹாரன் அடித்து அலப்பறை ... வைரல் வீடியோ!

 
bear

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து நள்ளிரவில் தொடர்ந்து ஹாரன் ஒலித்துக் கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு பதற்றமடைந்த அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்த போது, காருக்குள் பெரிய கறுப்பு கரடி ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு உறைந்து போயினர். காருக்குள் இருந்த உணவைத் தேடி உள்ளே நுழைந்த அந்த கரடி, எதிர்பாராதவிதமாக காரின் கதவு மூடிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் உள்ளேயே தவித்துள்ளது. வெளியேற வழி தெரியாமல் தவித்த கரடி, தற்செயலாக ஹாரனை அழுத்தியதால் தொடர்ச்சியாகச் சத்தம் எழுந்து அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

காருக்குள் கரடி மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால், கார் கதவை நேரடியாகச் சென்று திறப்பது ஆபத்தானது என உள்ளூர் மக்கள் யோசித்தனர். இதையடுத்துச் சுதாரித்துக் கொண்ட நபர் ஒருவர், காரின் பின் கதவின் கைப்பிடியில் நீண்ட கயிறு ஒன்றைக் கட்டிப் பாதுகாப்பான தூரத்திற்குச் சென்றார். பாதுகாப்பான இடைவெளியில் நின்று கொண்டு கயிற்றை பலமாக இழுத்துக் கதவைத் திறந்த அடுத்த நொடியே கரடி காரில் இருந்து வேகமாகக் குதித்து ஓடியது. "தப்பித்தோம் பிழைத்தோம்" எனத் தப்பிய அந்த கரடி, நொடிப் பொழுதில் அருகில் இருந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஓடிப் மறைந்தது.

Some folks in Gold Hill, Colorado awoke to a wild surprise Sunday. A bear had somehow broke into a car and became locked inside. Click Watch Live at the link in our

கரடி காருக்குள் இருந்து வெளியே வரப் போராடியதில் காரின் காற்றுப் பைகள் வெடித்ததோடு, இருக்கைகள் மற்றும் கதவுகளும் முற்றிலும் சேதமடைந்தன. அமெரிக்காவில் கரடிகள் கார்களின் கதவுகளை எளிதாகத் திறக்கக் கற்றுக் கொண்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் தங்கள் கார்களை எப்போதும் பூட்டி வைக்க வேண்டும் என்றும், வாகனங்களுக்குள் உணவுகளை வைக்கக் கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.