இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!

 
இயற்பியல் நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சென்

இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, அண்டவியல் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பெல்ஜியத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தை உருவாக்குவதில் இவர் ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புகளுக்காகவும், வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை வெற்றிகரமாகக் கண்டுபிடித்ததற்காகவும் இவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சிஸ் ஹால்சனின் தனித்துவமான யோசனையில் உருவான இந்த ஆய்வகம், தொலைதூர அண்டத்தில் தோன்றும் நியூட்ரினோக்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன் மூலம் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்கள் உருவாகும் வன்முறைச் சூழல்கள் மற்றும் இதுவரை அறியப்படாத அண்ட நிகழ்வுகள் குறித்த பல புதிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொள்ள முடிகிறது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகையாக 1 கோடியே 20 லட்சம் சுவீடன் குரோனே (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 11.55 கோடி) வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் முறைப்படி வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ளன.

நோபல் பரிசு அறிவிப்புத் தொடரின் ஒரு பகுதியாக நேற்று மருத்துவத்துறைக்கான பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியல் துறைக்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (அக்டோபர் 7) வேதியியல் துறைக்கும், அக்டோபர் 8-ல் இலக்கியத்திற்கும், அக்டோபர் 9-ல் அமைதிக்கான பரிசும், அக்டோபர் 12-ல் பொருளாதாரத்திற்கான பரிசும் அறிவிக்கப்பட உள்ளன.