பெரும் அதிர்ச்சி... பெல் நிறுவன பொது மேலாளர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

 
பெல்

 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனத்தின் பொது மேலாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகன். இவர்  கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலைல் இருந்து வந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

பெல்

இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பெல் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பொது மேலாளரின் அறைக்கு சென்று பார்த்த போது அந்த அறை உள் பக்கமாக பூட்டி இருந்தது.

ஆம்புலன்ஸ்

உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த பொது மேலாளரின் அறையை உடைத்து பார்த்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.  சண்முகத்தின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.  சண்முகத்தின் உடலை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.