இளம்பெண் பூமிகா மரணத்தில் திடீர் திருப்பம் - காதலனுடன் காரில் சென்றது அம்பலம்... கொலை வழக்குப்பதிவு!

 
பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பூமிகாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. அவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது காதலன் கிரண் மற்றும் கிரணின் சகோதரர் மீது பூமிகாவின் பெற்றோர் கொலைப் புகார் அளித்துள்ளனர்.

பெங்களூரு ராமோஹள்ளி பகுதியைச் சேர்ந்த பூமிகா, கடந்த 3-ம் தேதி தனது காதலன் கிரணைச் சந்திப்பதற்காக காரில் சென்னப்பட்டணாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் பெங்களூரு–மைசூரு விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பூமிகா உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

இதையடுத்து, சென்னப்பட்டணா போலீசார் முதலில் விபத்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பூமிகாவின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

காரில் சென்னப்பட்டணாவுக்குச் சென்ற பூமிகா, மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகப் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கிரணும் அவரது சகோதரர் ஆஷித்தும் பூமிகாவைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, அதை விபத்தாகக் காட்ட முயற்சிப்பதாகப் புகாரில் குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

இதனால் கிரண் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, கிரணைப் பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பூமிகாவின் மரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது போலீஸ் விசாரணைக்குப் பிறகே தெரியவரும். பெற்றோர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.