மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு… மனைவி உட்பட 7 பேரைக் கொன்றதாக கார் டிரைவர் கைது!

 
கர்நாடகா

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் என மொத்தம் 7 பேரைக் கொலை செய்ததாக கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியைச் சேர்ந்த இந்துசேகர் (Indushekhar) என்பவர் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் மனைவி சுனிதாவுக்கும் இடையே, அவர் தனது தாய் வீட்டுக்குச் செல்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனைவி சுனிதா, மாமியார் ரூபாவதி, மைத்துனர்கள் சிவக்குமார், சங்கர், அவர்களது மனைவிகள் திவ்யா, நளினி மற்றும் 7 வயது சிறுவன் புனீத் ஆகிய 7 பேரையும் இந்துசேகர் கொலை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Bengaluru cabbie held for killing 7 family members with grinding stone | Bangalore News - The Indian Express

உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசியதாகக் கூறப்படும் நிலையில், நந்தி மலை அடிவாரத்தில் 7 வயது சிறுவனின் உடல் மட்டும் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நளினியின் தாயார் அளித்த காணாமல் போனோர் புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து இந்துசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்