பெங்களூரு நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கி வெளிநாட்டினர் இருவர் உயிரிழப்பு!

 
நீச்சல்

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கர் மற்றும் ஓட்டல் ஊழியர் காயமடைந்தனர்.

பெங்களூரு ஹலசூரு பகுதியில் உள்ள கான்ராட் ஓட்டலின் மூன்றாவது தளத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள நீச்சல் குளத்தில் இருந்தபோது மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஜெர்மனி மற்றும் ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த நபர் மற்றும் இந்திய ஓட்டல் ஊழியர் ஆகியோரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெங்களூரு காவல்துறை துணை ஆணையர் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நீச்சல் குளத்தில் மின்சாரம் கசிந்ததற்கான காரணம், மின்சாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.