பெங்களூரு வெள்ளத்தில் படகு போல மிதந்த கார்! பயணிகளை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்... வைரல் வீடியோ!

 
கார்

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த கனமழையால், பனத்தூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கியது. அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி, தண்ணீரில் மிதக்கத் தொடங்கியது.

வெள்ளநீர் வேகமாக உயர்ந்ததால், காரின் ஜன்னல் வரை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் காருக்குள் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதைக் கவனித்த அப்பகுதி மக்கள், வெள்ளநீரையும் பொருட்படுத்தாமல் காரை நெருங்கி, கதவுகளைத் திறந்து பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், காரைத் தள்ளி பாதுகாப்பான மேடான பகுதிக்குக் கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

ஒயிட்பீல்டு, வர்த்தூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இந்தச் சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளம் தேங்குவதாகப் பொதுமக்களும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.