பெங்களூரு விடுதியில் கேரள இளம்பெண் குத்திக்கொலை... காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

 
கேரளா

 

பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதியில் கேரள மாநில இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது கங்கா மற்றும் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது கோகுல கிருஷ்ணா ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

செவிலியர் படிப்பு முடித்து வேலை தேடி வந்த கங்காவை, வேலை தேடும் நோக்கில் கோகுல கிருஷ்ணா பெங்களூருவுக்கு அழைத்து வந்து காட்டன்பேட்டை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்க வைத்துள்ளார். அறையில் தங்கியிருந்த நேரம் முடிவடைய இருந்த நிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Bengaluru lodge murder: Kerala woman stabbed to death at lodge by boyfriend after 4-year relationship, accused held | Bengaluru News - The Times of India

ஆத்திரமடைந்த கோகுல கிருஷ்ணா மறைத்து வைத்திருந்த கத்தியால் கங்காவைச் சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கங்கா வேறொரு வாலிபரைக் காதலித்து வருவதாக எழுந்த சந்தேகத்தில் இந்தக் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காட்டன்பேட்டை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து கோகுல கிருஷ்ணாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.