தீபாவளி சிறப்பு ரயில் ... நவம்பர் 6ம் தேதி பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி வரை!

 
தீபாவளி ரயில்

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைத்துள்ளது.

தீபாவளி ரயில்

பெங்களூரு – தூத்துக்குடி ரயில்

பெங்களூரு கண்டோன்மென்ட் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06533) நவம்பர் 6-ம் தேதி இரவு 9.45 மணிக்குப் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நவம்பர் 7-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இயக்கம்

தூத்துக்குடி – பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் (06534) நவம்பர் 7-ம் தேதி மதியம் 3.30 மணிக்குத் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 8-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும்.

தீபாவளி

இந்த ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு ரயில் சேவை, பெங்களூருவில் வசிக்கும் தென் மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.