போதையில் வந்த கணவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!

 
bengaluru

 

பெங்களூருவில் குழந்தை இல்லாத விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவரைக் கத்தியால் குத்திய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குழந்தை இல்லாததால் குடும்பத்தில் தகராறு

பெங்களூருவைச் சேர்ந்த ராஜசேகர் (44), மாலாஸ்ரீ (35) தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லாததால் இருவரும் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதுபோதையில் வந்த கணவருக்குக் கத்திக்குத்து

கடந்த நவம்பர் 11-ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜசேகருக்கும் மாலாஸ்ரீக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மாலாஸ்ரீ, சமையலறையில் இருந்த கத்தியால் கணவரின் மார்பில் குத்தியதாகக் கூறப்படுகிறது.

Wife allegedly stabs husband to death with kitchen knife in Bengaluru - The Hindu

இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் உடனடியாக விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.