பெங்களூருவில் அதிர்ச்சி - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி!

 
கள்ளக்காதல் இளம்பெண்

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த முபாரக் என்பவரை, அவரது மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

உடல்நலக்குறைவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முபாரக்கிற்கு உதவி செய்வதற்காக அவரது நண்பரான நஹிம் குரேஷி என்பவன் அடிக்கடி முபாரக் வீட்டிற்கு வந்து சென்றுள்ளான். அப்போது முபாரக்கின் மனைவி ஷாஹினா பானுவுக்கும் அவனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் படுத்த படுக்கையாக இருந்த கணவன் முபாரக்கின் கண்முன்னே மனைவியும் அவரது கள்ளக்காதலனும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கள்ளக்காதல்

தங்களது கள்ளத்தொடர்புக்குத் தொடர்ந்து இடையூறாக இருந்த முபாரக்கை, ஷாஹினா பானுவும் நஹிம் குரேஷியும் இணைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.