கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து... 8 வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாப பலி!

 
கல் குவாரி

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கல் குவாரி ஒன்றில் தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்களின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது குவாரியின் மேல் பகுதியில் இருந்த ஒரு மிகப் பெரிய பாறை திடீரென எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அங்குப் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் அந்தப் பாறை இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிப் பரிதாபமாக உடல் நசுங்கினர்.

Seven workers killed as rock collapses at quarry at Tavarekere near Bengaluru

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தேசிய மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும் இந்தத் துயரமான விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 8 தொழிலாளர்களும் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் பாறை இடிபாடுகளுக்குள் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கல் குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்குக் கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குவாரி உரிமையாளர்களின் மிக முக்கியக் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்துயரச் சம்பவத்தைத் தாங்கிக்கொள்ள அவர்களது குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.