உஷார்.. திருமண ஆசை காட்டி 15 பெண்களிடம் மோசடி!

 
கல்யாணம்

விவாகரத்து பெற்ற பெண்களைத் குறிவைத்துத் திருமண ஆசை காட்டி லட்சக்கணக்கில் பணமும் நகைகளையும் சுருட்டி வந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், விவாகரத்து பெற்ற பெண்களைத் தனது இலக்காகக் கொண்டு பழகி வந்துள்ளார். இவர் இது போன்று தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றியுள்ளார்.

உல்லாசம் சிசிடிவி பாலியல் திருமணம் காதல் கேமிரா

கோவையைச் சேர்ந்தவரும் மலேசியாவில் வசித்து வருபவருமான ஒரு பெண்ணிடமும் இவர் பழகி, அவரிடமிருந்து நகைகள், விலை உயர்ந்த செல்போன் மற்றும் 11 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

5வது திருமணம்

ஒருமுறை லாட்ஜில் இருவரும் தங்கியிருந்தபோது கண்ணனின் செல்போனை அந்தப் பெண் பார்த்துள்ளார். அப்போது அவர் வேறு பல பெண்களுடனும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கண்ணனை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.