உஷார்... அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது - தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் அதிக லைக் மற்றும் பார்வைகளைப் பெறும் நோக்கத்துடன், அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தபடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தங்களுக்கு அதிக பிரபலமும், லைக்குகளும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், தூத்துக்குடியில் இரண்டு இளைஞர்கள் அரிவாளைக் காட்டியவாறு இருசக்கர வாகனத்தில் ஊதாரித்தனமாகச் சுற்றி வந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர் அந்த இளைஞர்களைக் கண்டறிந்து பிடித்தனர்.
காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, இதுபோன்ற சட்டவிரோத மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனத் எச்சரித்தனர். பின்னர், தங்களது தவறை உணர்ந்த இருவரும் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை விடுவித்தனர்.
