உஷார்... ஓசியில் டீ வாங்கிக் கொடுத்து மயக்கம் அடையச்செய்து 3 பவுன் சங்கிலி பறிப்பு!

 
டீ நகை பறிப்பு செயின் கொள்ளை

சேலத்தில் இருந்து கரூருக்குப் பேருந்தில் பயணித்த முதியவரிடம் மர்ம நபர் ஒருவர் டீ வாங்கிக் கொடுத்து, அதில் மயக்க மருந்து கலந்து 3 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் (72). இவர் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், முதியவரிடம் மிகவும் அன்பாகப் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர், அவருக்குத் தனியாக டீ வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துக் குடிக்க வைத்துள்ளார். அந்த டீயைக் குடித்த சில நிமிடங்களிலேயே சாமுவேல் சுந்தரபாண்டியனுக்குக் கடுமையான மயக்கம் ஏற்பட்டுப் பேருந்திலேயே தூங்கிப் போயுள்ளார்.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

பேருந்து கரூர் பேருந்து நிலையத்தை அடைந்ததும் கண்விழித்துப் பார்த்த முதியவர், தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

இது குறித்து முதியவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சேலம் மற்றும் கரூர் பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.