உஷார்... இந்த கோழியைச் சாப்பிட்டா 3 வருஷம் ஜெயில்... வேட்டையாடினாலும் சிறைதண்டனை!

 
காட்டுக்கோழி காட்டுக்கோழி

இந்தியக் காடுகளில் வாழும் அரிய வகை உயிரினங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய மற்றும் மாநில வனத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காடுகளில் மட்டுமே வாழும் இயல்புடைய 'சாம்பல் காட்டுக்கோழி' எனப்படும் அரிய பறவையினத்தை வேட்டையாடுபவர்கள் அல்லது அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தற்பொழுது எச்சரித்துள்ளது.

சமீபத்தில் தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஜன்னாராம் வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்புக் கேமராவில் (Camera Trap) இந்த அரிய சாம்பல் காட்டுக்கோழி பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிக்கன் கோழி  கறி

இந்திய அரசு, சாம்பல் காட்டுக்கோழிகளைப் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்படி, இப்பறவைகளைப் பிடிப்பதோ, வளர்ப்பதோ அல்லது உணவிற்காக வேட்டையாடுவதோ சட்டப்படி அசுரக் குற்றமாகக் கருதப்படும். இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் விதிமுறைகளின் கீழ் இப்பறவைகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறிக் காட்டுக்கோழிகளை வேட்டையாடுபவர்கள் அல்லது சட்டவிரோதமாகக் கடத்துபவர்களுக்குக் கடுமையான நிதி அபராதத்துடன், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிக்கன் பக்கோடா

இந்தியாவின் தென்பகுதி மற்றும் மத்திய இந்தியக் காட்டுப்பகுதிகளில் மட்டுமே பரவலாகக் காணப்படும் இந்தச் சாம்பல் காட்டுக்கோழிகள், நமது நாட்டுப்புற வீட்டுக் கோழிகளின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணியாகக் கருதப்படுபவை ஆகும்.

இவற்றின் உடலில் காணப்படும் சாம்பல் நிறப் புள்ளிகளும், தனித்துவமான கழுத்து இறகுகளும் இவற்றின் அழகைக் கூட்டுவதுடன், அடர்ந்த காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் இவை பெரிதும் உதவுகின்றன. காடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் அரிய பறவையினங்களின் வாழ்வாதாரத்தை அழிவிலிருந்து மீட்கப் பொதுமக்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் கூட்டு ஒத்துழைப்பு அவசியம் என வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.