உஷார்.. இன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்... லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கான்னு பாத்துக்கோங்க!

 
மின் தடை மின் தடை

தமிழகத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் மின்வாரியத்தால் பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று ஜூன் 08, திங்கட்கிழமை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் காலை முதல் மதியம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

மின்வாரிய அறிவிப்பின்படி, இன்று பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய வட்டாரங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: சிட்லபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கோவை: எம்.ஜி. சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஈரோடு: கஞ்சிகோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேனி: சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

திண்டுக்கல்: அமரபூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பெரம்பலூர்: அதனாக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

புதுக்கோட்டை: வடுகபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

உடுமலைப்பேட்டை: இந்திராநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மின்

குறிப்பிட்ட இந்தப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (பராமரிப்புப் பணிகள் முடியும் வரை) மின்சாரம் இருக்காது என்பதால், அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு மின்சார வாரியம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்படும் பட்சத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.