உஷார்... வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வர்றீங்களா... அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்!
உஷார் மக்களே... ஃபாரின் தங்கம் என்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் போதோ அல்லது சொந்தக்காரர்களைப் பார்க்கப் போகிற சாக்கில் அங்கிருந்து ஊர் திரும்பும் போது, உறவினர்களுக்குத் தெரியாமல் தனியே ஷாப்பிங் செய்து தங்கத்துடன் தாயகம் திரும்பினால் உங்களுக்குத் தான் இந்த கட்டுரை.
இந்த புதிய விதிமுறைகளைத் தெரிஞ்சுக்கோங்க. இல்லைன்னா நம்மூர் பணத்தை விட அதிக விலைக் கொடுத்து தங்கத்தை வாங்கியது போல ஆகிவிடும். இந்த புதிய விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

சுங்க வாரியம் கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று வெளியிட்டுள்ள இது குறித்த அறிவிப்பில், “இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அல்லது சுற்றுலா விசாக்கள் தவிர செல்லுபடியாகும் விசாவைக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகள் இப்போது ரூ.75,000 மதிப்புள்ள பொருட்களை வரியில்லாமல் இந்தியாவுக்குள் கொண்டு வரலாம். இதற்கு முன்பு இந்த வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது. இந்தியாவில் வசிப்பவர் அல்லது ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் குறைந்த அளவிலான தங்க நகைகளை வரியில்லாமல் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வரலாம் என்று அறிவிக்கப்படலாம்.
18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எந்தவொரு பயணியும் புதிய லேப்டாப் போன்றவைகளை தங்கள் பேக்கேஜில் வரியில்லாமல் கொண்டு வரலாம். இந்த வசதி வெளிநாட்டில் இருந்து மின்னணு பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.
