உஷார்... வெளியே வராதீங்க... தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கனமழை... 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

 
மழை விடுமுறை

தமிழகத்தில் இன்று 33 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வீட்டை விட்டு அவசியமில்லாமல் வெளியே சுற்றாதீங்க. நீர்நிலைப் பகுதிகளுக்கு தேவையில்லாமல் போகாதீங்க. வயதானவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்களை தனியே வெளியே அனுப்பாதீங்க. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி, உள் மாவட்டங்களிலும் பருவமழை தீவிரம் காட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று மாறியுள்ளது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 5 முக்கிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக விடுத்துள்ளது.

கனமழை விடுமுறை பள்ளிகள் குடை வெள்ளம் மழை

வானிலை மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பின்படி, இன்று நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மற்றும் மலையகப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைக்கான தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

மிக கனமழை எச்சரிக்கையைத் தாண்டி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மொத்தம் 33 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை குடை கனமழை

தொடர் மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பள்ளிகள் மற்றும் பொதுமடங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதுடன், அணைகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மழை தொடர்பான அவசர உதவிகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.