உஷார்... சிலிண்டர் டெலிவரியின் போது இதையெல்லாம் செக் பண்ண மறக்காதீங்க!

 
கேஸ் சிலிண்டர் கேஸ் சிலிண்டர்

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், நுகர்வோர் தங்களுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டரை பெற்றுக்கொள்ளும் முன் சில பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்ப்பது மிக அவசியமாகும். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் கவனியுங்கள்.

கேஸ் சிலிண்டர் அதிரடி உயர்வு!!!..

சீல் மற்றும் மூடியைச் சரிபார்க்கவும்:

சிலிண்டர் உங்கள் வீட்டிற்கு வந்தவுடன், அதன் மேற்பகுதியில் உள்ள பாதுகாப்பு மூடி மற்றும் பிளாஸ்டிக் சீல் சரியாக இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். சீல் உடைந்திருந்தாலோ அல்லது கசிவு இருப்பது போலத் தெரிந்தாலோ அந்தச் சிலிண்டரைத் தயக்கமின்றித் திருப்பி அனுப்பிவிடுங்கள். மூடி தளர்வாக இருந்தால் காஸ் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது, இது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

சோட்டு சிலிண்டர்

எடை மற்றும் கசிவு பரிசோதனை:

சிலிண்டரில் சரியான அளவு காஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய எடை போட்டுப் பார்க்கக் கோரலாம். அதேபோல், டெலிவரி ஊழியரை வைத்தே சிலிண்டரில் கசிவு (Leakage) இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது நல்லது. கசிவு இருப்பது உறுதியானால், உடனடியாக ஏஜென்சியைத் தொடர்புகொண்டு மாற்றுச் சிலிண்டரை வழங்குமாறு கோர நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு.