உஷார்... வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ.6.95 லட்சம் மோசடி - துபாயில் தவித்த இளைஞர்!

 
பணம் ரொக்கம் சோதனை பறிமுதல் பணம் ரொக்கம் சோதனை பறிமுதல்

வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களைக் குறிவைத்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி புதுக்கோட்டை இளைஞரிடம் ரூ.6.95 லட்சம் பறித்த சிவகங்கை தம்பதியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு செல்வம் (34) என்பவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார். அதனைத் தொடர்பு கொண்டபோது, சிவகங்கையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அவரிடம் பேசியுள்ளனர். நியூசிலாந்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அதற்கான செலவுத் தொகையாகப் படிப்படியாக ரூ.6.95 லட்சத்தை அவரிடமிருந்து பெற்றுள்ளனர்.

பணம் ரொக்கம் போனஸ் ஊக்கத்தொகை உதவித்தொகை

நேரடியாக நியூசிலாந்து அனுப்பாமல், முதலில் சுற்றுலா விசா மூலம் துபாய்க்கு அனுப்பி அங்கிருந்து நியூசிலாந்து அழைத்துச் செல்வதாக அந்தத் தம்பதியினர் அன்பு செல்வத்தை நம்ப வைத்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி துபாய் சென்ற அன்பு செல்வம், அங்குச் சென்ற பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். நியூசிலாந்து செல்வதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல், சுற்றுலா விசா காலம் முடிந்ததும் அவரை அப்படியே தவிக்க விட்டுள்ளனர்.

கையிலிருந்த பணத்தை இழந்து, துபாயில் கடும் சிரமங்களுக்கு உள்ளான அன்பு செல்வம், ஒருவழியாகச் சொந்த ஊர் திரும்பினார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை தம்பதியினர் மீது காவல்துறையினர் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

500 ரூபாய் ரொக்கம் பறிமுதல்

வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாகச் சுற்றுலா விசா மூலம் வெளிநாடு சென்று அங்கு வேலை தேடிக்கொள்ளலாம் என்று கூறுபவர்களை நம்பிப் பணத்தை இழக்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.