உஷார்... பேருந்தில் இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து செல்போன் திருடிய மூதாட்டி!

 
செல்போன் திருட்டு

சென்னையில் மாநகர பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம், மூதாட்டி ஒருவர் கவனத்தை திசைதிருப்பிக் கைவரிசை காட்டி செல்போன்களைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் மூதாட்டி ஒருவர் வேண்டுமென்றே பேச்சுக்கொடுத்து அவரது கவனத்தைத் திசைதிருப்பியுள்ளார். அந்த பேச்சில் பெண் கவனம் செலுத்திய நேரத்தில், பையை பிளேடால் கீறி அதிலிருந்த சுமார் 60,000 ரூபாய் மதிப்பிலான இரண்டு செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், MTC நிர்வாகம் இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.