உஷார்... தட்கல் டிக்கெட் முதல் கிரெடிட் கார்டு வரை... நாளை அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்!

 
1 1ம் தேதி அமலுக்கு வரும் விதிமுறைகள் மாதத்தின் முதல்

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த பல விதிமுறைகள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் பாக்கெட்டை நேரடியாகப் பாதிக்கும் பல புதிய நடைமுறைகளும் திருத்தங்களும் அமலுக்கு வருகின்றன.

1. ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய டோக்கன் முறை

ரயில் நிலைய கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நிலவும் கடுமையான கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தவும் புதிய டோக்கன் முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்துகிறது:

ஏசி வகுப்புகளுக்கான தட்கல் டோக்கன் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை வழங்கப்பட்டு, காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்கப்படும். சாதாரண படுக்கை  வகுப்புகளுக்கான டோக்கன்: காலை 9:30 மணி முதல் 10:00 மணி வரை வழங்கப்பட்டு, காலை 11 மணிக்கு முன்பதிவு செய்யப்படும். ஏசி வகுப்புகளுக்கு அதிகபட்சமாக 10 டோக்கன்களும், சாதாரண படுக்கை வசதிக்கு 15 டோக்கன்களும் மட்டுமே வழங்கப்படும். டோக்கன் பெறும்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

ரயில் டிக்கெட்

2. எல்.பி.ஜி சிலிண்டர் விலையில் திருத்தம்

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியன்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றன. ஆகஸ்ட் 1 முதல் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி சிலிண்டர்களின் புதிய விலை நிலவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

3. தாமதமான வருமான வரி தாக்கல் மற்றும் அபராதம்

இன்று ஜூலை 31-ம் தேதியுடன் வழக்கமான முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடையும் நிலையில்,  ஜூலை 31-க்குள் தாக்கல் செய்யாதவர்கள் நாளை ஆகஸ்ட் 1 முதல் தாமதமான படிவத்தை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ₹5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ₹5,000 வரை அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும். ₹5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு ₹1,000 அபராதக் கட்டணமாக விதிக்கப்படும்.

ஐடிஆர்

4. வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்கள்

எச்டிஎஃப்சி, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட பல முக்கிய வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு சேவை மற்றும் கட்டண விதிகளில் திருத்தம் செய்கின்றன: குறிப்பிட்ட வகை கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் ரிவார்டு பாயிண்ட்களில் குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

கிரெடிட் கார்டு மூலம் செலுத்தப்படும் பயன்பாட்டுக் கட்டணங்கள், கல்வி கட்டணம் மற்றும் வீட்டு வாடகை செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளுக்கு 1% முதல் கூடுதல் சேவைக்கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

5. மத்திய சி.கே.ஒய்.சி அறிமுகம்

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி  நிறுவனங்களுக்குள் வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி விபரங்களை எளிமையாக்கவும், பணமோசடியைத் தடுக்கவும் CKYC 2.0 நடைமுறை ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாகச் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஒரு மையப் பதிவேட்டின் வாயிலாக வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் அனைத்து நிதி நிறுவனங்களும் தகவல்களைச் சரிபார்க்க முடியும்.