உஷார்... ஜிம்மில் உடற்பயிற்சி செய்த படியே மயங்கி விழுந்து அரசு மருத்துவர் உயிரிழப்பு!

 
உடற்பயிற்ச்சி ஜிம்

அசாம் மாநிலம் நாகோன் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் சஹின் ரஹீம், உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகோன் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 47 வயதான சஹின் ரஹீம் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று காலை அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று வொர்க் அவுட் செய்துகொண்டிருந்தபோது, காலை 7.36 மணியளவில் அவர் திடீரென மயங்கிச் சரிந்து விழுந்தார்.

உடனடியாக அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.