உஷார்.. பித்தப்பையில் கற்கள் உருவாகக் காரணமாகும் 4 முதன்மையான உணவுகள் இது தான்!

 
பித்தப்பை கற்கள் பித்தப்பையில் பித்தப்பை கற்கள் பித்தப்பையில்

மனித உடலில் செரிமானத்திற்கு மிக முக்கியப் பங்காற்றும் பித்தப்பையில் (கால்பிளாடர்) கற்கள் உருவாவதற்கு, நாம் அன்றாடம் உட்கொள்ளும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களே முதன்மைக் காரணம் என்று உணவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக நாம் தவிர்க்க வேண்டிய 4 முக்கிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டுள்ளது.

நம் கல்லீரலில் இருந்து சுரக்கும் பித்தநீர் (பைல் ஜூஸ்) கொழுப்பைக் கரைக்கப் பயன்படுகிறது. நாம் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, பித்தநீரில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து அது படிவங்களாக மாறுகிறது. இந்த படிவங்களே நாளடைவில் பித்தப்பையில் கற்களாக உருவெடுக்கின்றன.

உணவியல் வல்லுநர்களின் ஆய்வின்படி பித்தநீரின் சமநிலையைக் குலைத்து, கற்கள் உருவாக வழிவகுக்கும் 4 முக்கிய உணவுப் பொருட்களைத் தவிர்க்க சொல்கிறார்கள். 

பூண்டு ஸ்லிம் கொழுப்பு உடல்பயிற்சி தொப்பை

அதிக கொழுப்புள்ள வறுத்த உணவுகள் காரணமாக அமைகின்றன. எண்ணெயில் பொரித்த வறுவல்கள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் மற்றும் சிப்ஸ் போன்ற அதிக நிறைவுற்ற கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) கொண்ட உணவுகள் உடலில் கொலஸ்ட்ராலை உயர்த்துகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை  உணவு வகைகளான இனிப்புகள், கார்போனேட்டட் குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாறுகளில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கான ஆபத்தை இருமடங்காக அதிகரிக்கிறது.

மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், மைதாவால் செய்யப்படும் பரோட்டா, வெள்ளை ரொட்டி (பிரெட்), பேக்கரி பலகாரங்கள் மற்றும் பாஸ்தா ஆகியவற்றில் நார்ச்சத்து முற்றிலும் இல்லை. இவை இன்சுலின் அளவை அதிகரித்து பித்தப்பையைப் பலவீனப்படுத்துகின்றன.

சிக்கன் பக்கோடா

அதே போன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பன்றி இறைச்சி, தொத்திறைச்சி (சாசேஜ்) மற்றும் பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சிகளில் அதிகப்படியான கொழுப்பும் உப்பும் நிறைந்துள்ளதால், அவை பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மையைப் பாதிக்கின்றன.

பித்தப்பை கற்கள் வராமல் தற்காத்துக் கொள்ளவும், ஆரம்பக்கட்ட பாதிப்புகளைக் குணப்படுத்தவும் உணவியல் நிபுணர்கள் பின்வரும் எளிய உணவு மாற்றங்களைப் பரிந்துரைக்கிறார்கள். அன்றாட உணவில் நார்ச்சத்து (ஃபைபர்) அதிகம் உள்ள கீரைகள், காய்கறிகள், முழுத் தானியங்கள் மற்றும் நவதானியங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பிள், பேரிக்காய், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றைத் தினமும் சாப்பிடுவதும், உடலுக்குத் தேவையான அளவு (குறைந்தது 3 லிட்டர்) தூய்மையான குடிநீரைக் குடிப்பதும் பித்தநீரைத் திரவ நிலையிலேயே வைத்திருக்க உதவும்.

சமையலுக்குப் பயன்படுத்தும் ரீஃபைண்ட் எண்ணெய்களுக்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது கடலை எண்ணெயைக் குறைந்த அளவில் பயன்படுத்தலாம். இந்த ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பித்தப்பையில் தேவையற்ற கொலஸ்ட்ரால் படிவங்கள் உருவாவதைத் தடுத்து, அறுவை சிகிச்சை போன்ற மருத்துவச் சூழல்களிலிருந்து நம்மை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.